கொரோனாவின் 3 ம் அலை 6 முதல் 8 வாரங்களில் தாக்கும் அதிர்ச்சி தகவல் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த இரண்டாம் அலையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏராளம்.மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது கொரோனாவின் 3 ம் அலை இந்தியாவை 6 முதல் 8 வாரங்களில் தாக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியது,இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை பிறப்பித்தது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

முகக்கசவம் அணிதல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்ற வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டு வருகின்றனர்.அடுத்த 6 முதல் 8 வாரங் களில் வைரஸின் மூன்றாம் அலை தாக்கக் கூடும்.எனவே, மூன்றாம் அலையை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்தில் டெல்டா மாறுபாட்டின் பரவல் குறித்தும் பேசிய அவர், வைரஸ் இன்னும் பிறழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும் இந்த மூன்றாம் அலையை தடுக்க நாம் வியூகம் அமைப்பது அவசியம் என ரன்தீப் குலேரியா கூறினார்.