3.49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,49, 691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 1,69,60,172 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 1,92,311 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 26,82,751 ஆக அதிகரித்துள்ளது. இதுமொத்த பாதிப்பில் 15.82 சதவீதம் ஆகும்.