பெங்களூரின் சாய் பாபா கோவிலில் முகக்கவசம் மற்றும் மாத்திரைகள் கொண்டு அலங்காரம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை மிகவும் பாதித்தது.தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.இதனை சமாளிக்க அரசு ஊரடங்கை தனி தனியே அறிவித்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.மக்கள் முகக்கவசம் மற்றும் சமூகஇடைவேளையை கடைபிடிக்க அரசு அறிவுறுத்திவருகிறது.தற்போது இரண்டாம் அலை குறைய தொடங்கிய நிலையில் 3 ம் அலை வரும் என்று அச்சம் மக்கள் மனதில் இருந்துவருகிறது.

பெங்களூர் ஜேபி நகரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.மேலும் குரு பூர்ணிமா தினத்தன்று, ஜே.பி.நகரில் உள்ள ஸ்ரீ சத்ய கணபதி ஷீர்டி சாய் கோயில் மாத்திரைகள், முகக்கவசங்கள் மற்றும் சானிடிசர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டது.

கோவிட் -19 மூன்றாம் அலை மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தீம் தேர்வு செய்யப்பட்டது. அலங்காரமாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள், முகமூடிகள், மாத்திரைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் பின்னர் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படும்.மேலும் சாய் பாபா சிலை முழுவதும் டோலோ 650, கோஃப்சில்ஸ், மெடமோல், வைட்டமின் சீப்ளஸ் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இந்தியாவில் மூன்றாவது அலை வரக்கூடாது என வேண்டி வழிபட்டனர்.இந்த கொரோனா காலத்தில் மக்களை பாதுகாக்கவும் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி இந்த சிறப்பு அலங்காரமும் பூஜையும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.