திரையரங்குகள் 15ஆம் தேதி முதல் திறக்கலாம் – மத்திய அரசு அனுமதி

கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் 15ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதனையடுத்து, டெல்லி, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில், தமிழக அரசு இதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இது தொடர்பாக வரும் 20ஆம் தேதி திரையரங்கு உரிமையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதனிடையே, மத்திய அரசு விதித்த வடிகாட்டுதல் படி, 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்புவோம் ஆன்லைன் புக்கிங் வசதி செய்து தரப்படும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

இதனை முதல்வரிடம் நடைபெறும் சந்திப்பில் வலியுறுத்த உள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.