உலகளவில் அதிகரிக்கும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை !

கொரோனா தொற்று கடந்த வருடம் அறியப்பட்டு உலகை உலுக்கியெடுத்தது.இன்று கொரோனாவின் பிடியில் தான் இந்த உலகம் உள்ளது என்றே கூறலாம்.தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என பாதிப்பு அதிகரித்து தான் வருகிறது.

தற்போது உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள தகவல்,உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை மேலும் அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடக்கவில்லை.மேலும் மக்கள் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் கட்டுப்பாடுகள் பின்பற்றுவது மிக அவசியம் என்று தெரிவித்துள்ளது.