கரோனா தொற்று பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.இதற்கு காரணம் பொது மக்கள் விதிமுறைகளை பின்பற்றாது தான்.மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப், கர்நாடகம் மாநிலத்திலும் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த ஞாயிறன்று அங்கு 3,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது, திங்கட்கிழமை 3260 பேருக்கும், நேற்று 3,512 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.
டெல்லியில் இன்று 1,254 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப்பிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,634 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.



