இந்தியாவில் குறையத்தொடங்கிய கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை அமல்படுத்தின.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீட தகவல்,கடந்த ஏப்ரல் 2ம் தேதிக்குப் பின்னர் குறைவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,94,39,989 மற்றும் நேற்று வீடு திரும்பியோர்: 1,32,062 ,இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர்: 2,80,43,446 .

இதுவரை இறந்தோர் எண்ணிக்கை: 3,70,384 ,இப்போது நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 10,26,159 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.