Coonoor helicopter crash: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்

Coonoor helicopter crash
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

Coonoor helicopter crash: குன்னூர் அருகே கடந்த மாதம் 8-ந்தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனிடையே இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலையே முக்கிய காரணம் என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்ப குறைபாடும் இல்லை என ஏர் மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையிலான குழு விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளன.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: COVID third phase: தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்