Squirrel on rampage: கருணைக் கொலை செய்யப்பட்ட அணில்..!

squirrel
கருணைக் கொலை செய்யப்பட்ட அணில்

Squirrel on rampage: பிரிட்டன் பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கத்தின் கூற்றுப்படி, சாம்பல் அணில்கள் ஓர் ஆக்ரோஷமான இனம். இது 1870-களில் வட அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதியில் அவை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் அழிவு மற்றும் மனிதர்களை கொடூரமாக தாக்கும் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசாங்கம் இதனை காடுகளுக்குள் விடுவதை தடை செய்தது.

இந்நிலையில், பிரிட்டனின் பிளின்ட்ஷயரில் உள்ள பக்லி பகுதியில் ஒரு சாம்பல் அணில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள 18 நபர்களை கடித்துள்ளது. உள்ளூர் மக்களால் ஸ்ட்ரைப் என்ற பெயரால் அந்த அணில் அழைக்கப்படுகிறது.அணிலிடம் கடிபட்ட கொரின் ரெனால்ட்ஸ் என்பவர் கூறுகையில், எனது தோட்டத்திற்குள் நுழைந்து இந்த அணில் தானியங்களை தின்றுவிடும். முதலில் என்னை எந்த தொந்தரவும் செய்யாத அணில், திடீரென ஒரு நாள் என்னை கடித்தது. அதனால் எனக்கு ரத்தம் வந்தது என தெரிவித்தார்.

இது குறித்து மற்றொருவர் கூறுகையில், ஸ்ட்ரைப் என்னைக் கடித்ததுடன், என் நண்பனையும் தாக்கியது. மேலும் பலரைத் தாக்கியது. என் வீட்டை விட்டு வெளியே செல்ல பயமாக உள்ளது. ஸ்ட்ரைப் கடித்ததை சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளேன் என்றார்.

இந்த ஸ்ட்ரைப் அணில் அதே பகுதியை சேர்ந்த 18 பேரை தாக்கியுள்ளது. இறுதியில் இந்த அணில் கால்நடை மருத்துவரால் பிடிக்கப்பட்டது. அங்கு அணிலை காட்டுக்குள் விடுவது சட்டப்பட்டி குற்றம் என்பதால் அது கருணைக் கொலை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: COVID third phase: தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்