TN Pongal Gift: 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு..!

TN Pongal Gift: ரேஷன் கடைகளில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் முழுக் கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பச்சரிசி, துணிப்பை உள்பட 20 பொருட்கள், முழுக் கரும்பு வழங்க மொத்தம் ரூ.71.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: Accident in Nellai: மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு..!