Female Infanticide: கழிவறை தொட்டிக்குள் பெண் சிசு கொலை

Female Infanticide: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, அருகே உள்ள கழிவறையில் இறந்த நிலையில் பிறந்த சில நாட்களே ஆன பெண் சிசு மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிவறையை துப்புரவுப் பணியாளர்கள் வழக்கம்போல் சுத்தம் செய்ய சென்றனர். அப்போது, கழிவறையின் தண்ணீர் தொட்டியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவின் உடல் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக, காவல்நிலையத்துக்கு இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தை மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மருத்துவமனை அவசரப் பிரிவில் இருக்கும் சிசிடிவிகளை ஆய்வு செய்த அவர்கள், நேற்றிலிருந்து கழிப்பறைக்கு சென்றவர்கள் யார்? என்ற விவரத்தை சேகரித்தனர். அப்போது, ஒரு பெண் மட்டும் கழிப்பறைக்கு சென்றுவிட்டு சுமார் அரைமணி நேரத்துக்குப் பிறகு வருகிறார்.

அவரின் நடவடிக்கையும் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதால், அவரின் விவரத்தை சேகரித்து காவல்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்தப் பெண் குழந்தையை மருத்துவமனையில் பெற்றெடுத்துவிட்டு, அங்கு விட்டுச் சென்றாரா? அல்லது குழந்தையை அங்கு கொண்டு வந்து கொலை செய்துவிட்டு சென்றாரா? என்ற கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: tn govt staff: அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது உயர்வு