கொரோனாவில் தவிக்கும் கேரளா 2 நாட்கள் முழு ஊரடங்கு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளன.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஜூலை 31-ம் தேதி மற்றும் , ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை விட இந்த வருடம் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக, கேரளாவில் 22,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது தேசிய எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.கேரளாவில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வரும் ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.