கல்வித் தொலைக்காட்சியில் சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை அதிகம் பாதித்தது.இந்நிலையில்,கொரோனா தொற்றின் பரவலை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று இருக்கும் இந்த காலத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்த கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையில்,தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத சூழலில், அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.