ரேஷன் கடைகளில் புதிய திட்டம்..!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் உணவுத் தேவையை ரேஷன் கடைகள் மூலம் போக்கிவருகின்றனர். ஆனால் பல இடங்களில் உணவுப் பொருள்கள் இருப்பு இல்லை எனக் கூறி பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை. அதேபோல் தரக்குறைவான பொருள்களும் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகள் குறித்து இணைய வழியில் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் சிரமம் உள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டு மக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.