கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.58 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 89.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் . தா.பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரை கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் உள்ளிட்டோர் கண்காணித்து வந்தனர். எனினும் அவரின்  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மத பிளவுகளை விரிவுப்படுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தை சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்து விட்டது.