நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக நிலக்கரி அமைச்சம் விளக்கம் அளித்துள்ளது. அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்குமம் அளவிற்கு நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது என நிலக்கரி அமைச்சகம் கூறி உள்ளது.

‘மின்தடை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை. பருவநிலை காரணமாக சில பகுதிகளுக்கு நிலக்கரி அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது. கனமழை இருந்தாலும் நிலக்கரி இந்தியா லிமிடெட், மின் துறைக்கு 225 மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்கியிருக்கிறது. நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி இந்த ஆண்டு 24 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்றும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை