ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மென்பொருள் பொறியாளர். இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் இளைஞர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.இதனால் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த குறைகள் இல்லாத புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

அதுமட்டுமில்லாமல்ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்திருப்பதில் பயனில்லை. தமிழ்நாடு இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆன்லைன் சூதாட்ட தடைக்கான சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது