வேதா நிலையம் நினைவு இல்லமாகிறது

ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாக மாறுகிறது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்த வளாகத்தையும், அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையையும் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு திறந்துவைக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.