கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி என தமிழக சட்டசபையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடன்களை தமிழக ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



