ரஜினியுடன் இணையும் ஜகபதி பாபு

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்துள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் ஏற்கெனவே ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.

’அண்ணாத்த’ திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.