குஜராத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு

கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மத்திய மாநில அரசுகள் நோய் பரவலைத் தடுப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்பாக, இன்று பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திலும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், குஜராத்தில் நான்கு பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.