Director Sethumadavan: தமிழ் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்

eteran director sethumathavan
திரைப்பட இயக்குனர் காலமானார்

Director Sethumadavan: மலையாளம் மற்றும் தமிழ்ப்பட இயக்குனர் கே.எஸ் சேதுமாதவன் சென்னையில் தனது 90வது வயதில் காலமானார்.

1931 ஆம் ஆண்டு பிறந்த சேதுமாதவன் இயக்குநர் கே. ராம்நாத்தின் உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார். ஓடையில் நின்னு’, ‘தாகம்’, ‘கூட்டுக் குடும்பம்’ உள்ளிட்ட 60 படங்களை சேதுமாதவன் இயக்கியுள்ளார்.

இதுவரை சிறந்த இயக்குநருக்கான நான்கு தேசிய விருதுகள் உட்பட பத்து தேசிய விருதுகளை சேதுமாதவன் பெற்றுள்ளார்.

1962ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘கண்ணும் காரலும்’ என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்.

தமிழில் எம்.ஜிஆர். நடித்த ‘நாளை நமதே’, கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’, ‘மறுபக்கம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் ‘மறுபக்கம்’ சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று (டிசம்பர் 24) அதிகாலை சேதுமாதவன் காலமானார். அவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவில், காலத்தால் அழியாத காவியங்களை திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச் சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.

என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Harbhajan Singh retire: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு