‘சுல்தான்’ படத்தின் அப்டேட்..!

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுல்தான்’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது: சுல்தான் படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்து, பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்க முயன்றோம். பின்னர் படத்தின் மீதிருந்த நம்பிக்கையாலும், மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்ததாலும் முடிவை மாற்றிவிட்டோம்.


ஆரம்பத்தில் சுல்தான் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டோம். பின்னர் பாகுபலி படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் கொடுத்த அறிவுரையின் படி, தற்போது அதனை ஒரே படமாக எடுத்துள்ளதாக அவர் கூறினார்.