“புதுப்புது அர்த்தங்கள்” என்ற சீரியலில் தேவயானி..!

நடிகை தேவயானி நடிக்கும் புதிய சீரியல் தொடர்பான தகவல் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

தனது குடும்பப் பாங்கான நடிப்பால் 90’ஸ் கிட்ஸ் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தவர் நடிகை தேவயானி. தற்போது ஒரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தேவயானி. இதில் சிறப்பு என்னவென்றால் 12 வருடம் கழித்து அபி – பாஸ்கர் ஜோடி மீண்டும் இணைகிறது. ஆம் கோலங்கள் சீரியலில் பாஸ்கராக தேவயானியுடன் நடித்த அபிஷேக், இந்த புதிய சீரியலிலும் நடிக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் “புதுப்புது அர்த்தங்கள்” என்ற சீரியலில் தான் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் இதன் பூஜை நடைபெற்றுள்ளது. அந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.