தேனீக்களை உடலில் மொய்க்க விட்ட ஏஞ்சலினா ஜோலி!

தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது உடலில் தேனீக்களை மொய்க்க விட்டு புது விதமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.

இந்த போட்டோ ஷுட் பற்றி புகைப்படக்கலைஞர் டான் வின்டர்ஸ், “18 நிமிடங்கள் வரை ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்கள் மொய்க்க போட்டோ ஷூட் நடத்த வேண்டியிருந்தது. இந்த பெருந்தொற்று நேரத்தில் இது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. இருந்தாலும் பாதுகாப்புடன் செய்து முடித்துள்ளோம்.

40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிச்சர்ட் அவெடன் எடுத்த ‘பீ கீப்பர் போர்ட்ரைட்’ படத்தை முன்மாதிரியாக வைத்து அதே முறையை பின்பற்றி இந்த படத்தை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். இந்த போட்டோ ஷுட்டின் போது ஏஞ்சலினா ஜோலி தவிர மற்ற அனைவரும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.