Enforcement Directorate: சியோமி நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனருக்கு அமலாக்கத்துறை சம்மன்

அமலாக்கத்துறை சம்மன்
அமலாக்கத்துறை சம்மன்

Enforcement Directorate: சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமியின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயினுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது சியோமி நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கும் மனு குமார் ஜெயின், அந்நியச் செலவாணி முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்குள் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு ஜெயின் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

முன்னதாக வருமான வரி ஏய்ப்பு செய்த குற்றம் தொடர்பாக சியோமி அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த பிப்ரவரியில் சியோமி நிறுவனத்திற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது.

அந்நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் இந்திய அந்நியச் செலாவணி சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பது குறித்த தகவல்களை விசாரணையின் போது ஜெயின் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், சியோமி நிறுவனம், அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மற்றும் சீனாவில் உள்ள அதன் தாய் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தற்போதுள்ள வணிக கட்டமைப்புகளையும் நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது.

Enforcement Directorate To Probe Former Xiaomi Head Manu Jain

இதையும் படிங்க: CPI inflation: 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்வு