CPI inflation: 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்வு

பணவீக்கம் உயர்வு
பணவீக்கம் உயர்வு

CPI inflation: 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 6.95 சதவீதமாக இருந்தது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இதை தெரிவித்துள்ளது.

கடந்த 17 மாதங்களில் இதுதான் அதிகபட்ச பணவீக்கம் ஆகும். தொடர்ந்து 3-வது மாதமாக, 6 சதவீதத்துக்கு மேல் பணவீக்கம் பதிவாகி வருகிறது.

கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில், பணவீக்கம் 5.52 சதவீதம்தான் இருந்தது. தற்போது, உணவு பொருட்கள், பால் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்ததுதான், பணவீக்க உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

CPI inflation rockets to 17-month high of 6.95% in March from 6.07% in February

இதையும் படிங்க: Beast Review: உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது- இந்தி மொழி குறித்த ’பீஸ்ட்’ வசனம்