China impose Lockdown: மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு

china-imposes-lockdown-on-changchun-amid-new-virus-outbreak
மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு

China impose Lockdown: சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ம் ஆண்டுல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதன் மூலம் பலகோடி மக்கள் பாதிப்படைந்தும், பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியது.

இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. ஒருபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: AAP Victory: பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்

அந்தவகையில், உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தது. இந்தநிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வரும் இந்த நகரில், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, எப்போதிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

China imposes lockdown in industrial centre amid new COVID-19 outbreak

இதையும் படிங்க: Dayalu Ammal: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்