மருத்துவக் குழுவுடன் டிசம்பர் 28ஆம் தேதி ஆலோசனை!!!

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில், இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவது சமீபத்தில், கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், உலக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இங்கிலாந்துடனான விமான சேவையை உலக நாடுகள் நிறுத்தியுள்ளன. புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூடான் அரசு 7 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகைகள் வரவுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், வரும் 28-ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் நடத்த இருக்கும் இந்த ஆலோசனை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.