பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

Chennai Super King's bowler Dwayne Bravo celebrates after taking the wicket of Rajasthan Royal's batsman Jos Buttler during the 2018 Indian Premier League (IPL) Twenty20 cricket match between Rajasthan Royals and Chennai Super Kings at The Maharashtra Cricket Association Stadium in Pune on April 20, 2018. / AFP PHOTO / PUNIT PARANJPE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி- 50, டிவில்லியர்ஸ் 39, தேவதூத் பாடிக்கல்- 22, ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் டூப்ளெசிஸ் அசத்தலான 3 கேட்டுகளை பிடித்தார். தொடர்ந்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறனிய சென்னை அணி 18.4 ஓவரில் வெற்றி 150 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

சென்னை அணியில் அதிகப்பட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 65 ரன்களும், ராயுடு 39 ரன்கள் எடுத்தனர். டோனி 19 ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இப்போது 8 புள்ளியை பெற்றுள்ளது.