12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்கள் !

மேஷம்

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள் வாகன வகையில் ஆதாயம் தரக்கூடிய நாளாக அமையும்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும்.

ரிஷபம்

படிப்பதற்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்திற்காக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்

குடும்பத்தில் அமைதி தவழும் அன்னியோனியம் சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் ஓரளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

கடகம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நிதி உதவி கிடைக்கும். வங்கிகளில் கடன் கேட்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பத்தக்க இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.உத்தியோகத்தில் இடம் மாறுதல் தொடர்பான விஷயங்களை என்ற ஆரம்பிக்கலாம்.

கன்னி

சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறிய அளவில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும்.

துலாம்

பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

பெரியோர்களின் ஆசீர்வாதத்தில் பெறுதல் போன்ற மன நிம்மதி தரக்கூடியது.படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நாட்களில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.

தனுசு

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இனிமையான நாள் ஆகும்.

மகரம்

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் மனதில் உதயமாகும்.உங்களுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும்.

கும்பம்

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகளும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைவீர்கள்.உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைக்கும். இவைகளால் வெற்றி உண்டாகும்.நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் தனவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த பொருளாதாரம் கை வந்து சேரும்.