தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வரக்கூடும். இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.