Rain in tn : தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.பருவமழை காரணமாக தமிழகத்தில் மிகுதியான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.chances of rain in tamilnadu

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.