தமிழகத்தில் கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

தமிழகத்தில் கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியது,தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் இன்று முதல் 27.07.2021 வரை ,தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.எனவே ,மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.