கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9-ம் தேதி முதல் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே கடலோர பகுதிகளில் ஜூலை 9-ம் தேதி முதல் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவ காற்று மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு ஜூலை 10-ம் தேதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

வடமேற்கு இந்தியாவில் ஜூலை 9-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.