செல்வமுருகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை

செயின் பறிப்பில் கைதான செல்வமுருகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த செல்வமுருகன்(40) சங்கிலி பறிப்பு வழக்கில் நவம்பர் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நவ.4ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தன கணவரை போலீஸ் பொய் வழக்கில் கைது செய்து சித்ரவதைக்கு உட்படுத்தியதாக மனைவி, எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விழுப்புரம் மருத்துவமனையில் உள்ள செல்வமுருகனின் உடலை வாங்க 4ஆவது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்