தொற்று பரவல் அதிகம் இருக்கும் மாநிலங்களில் மத்திய குழு ஆலோசனை !

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு கடைபிடித்து வருகிறது.இந்த ஊரடங்கு காலத்தில் பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனினும் கரோனா பரவல் அதிகரித்துள்ள கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட 11 மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்தது.தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றிருந்தனர்.

மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்தக் குழுவினர் வழங்கினர்.கரோனா பரிசோதனை, சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு செய்தது.