18,255 பேருக்கு இந்திய குடியுரிமை – மத்திய இணை அமைச்சர் தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் 18 ஆயிரத்து 255 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2019 வரை நான்கு ஆண்டுகளில் 18 ஆயிரத்து எண்ணூற்று 555 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்களை இரு அவை உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 வேளாண் மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும், மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பேசும்போது கடந்த 2015 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 459 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் 1076 பேருக்கும், 2017ஆம் ஆண்டில் 795 பேருக்கும், 2018 586 பேருக்கும், 2019ஆம் ஆண்டில் 939 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here