இந்த ஆண்டு 15 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்த குழு, 9 மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மொத்தம் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதிகபட்ச டெங்கு காய்ச்சல் பதிவாகி உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் மொத்த டெங்கு நோயாளிகளில் 86 சதவீதம் இந்த மாநிலங்களில் பதிவாகி உள்ளது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த ஆண்டின் விடுமுறை நாட்கள் !