கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.
தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை இன்று வெளியாகிறது.
மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை மத்திய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in மூலம் பார்த்து தகவல்களை அறிந்து கொள்ளலாம்.



