ஜூலை 31ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்

சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

பிளஸ் 1 வகுப்பு பாடங்களில் 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.

பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் 40 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.

பிளஸ் 2-வில் யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.