பண மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது..!

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ரோஷன் பேக் ஐ நேற்று இரவு கைது செய்து சிபிஐ அதிகாரிகள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதலே சிவாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் ஏழு பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐ எம் ஏ நிறுவனத்தைச் சேர்ந்த நகைக்கடை நடத்திய மன்சூர் என்பவர் இவர் அமைச்சராக இருக்கும் பொழுது இவருக்கு விலை உயர்ந்த கார் கொடுத்ததும் அதேபோல 400 கோடி ரூபாய் நிதி கொடுத்ததும் இதைப்பற்றி சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி அப்போது ரோஷன் பேக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அதனடிப்படையில் இன்று காலை முதல் ரோசன்பேக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.