வாவ்..அமெரிக்கா மக்களுக்கு அடித்த ஜாக்பாட் !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு டிரக் பண மூட்டைகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது டிரக்கின் கதவு திறந்ததால் பணக்கட்டுகள் சாலையில் சிதறின. சாலையில் கொட்டிய பணத்தை அப்பகுதி மக்கள் அள்ள தொடங்கினர்.

காலை 9 மணியளவில் அமெரிக்காவின் கார்ல்ஸ்பாத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் டிரக் சென்று கொண்டிருந்தபோது, ​​கதவுகளில் ஒன்று திறந்து, பணப் பைகளை சாலையில் கொட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வைரல் ஆகியது.இதன் சம்பவம் தெரிந்து அங்கு வந்த போலீசார் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

எனினும் பணம் மூட்டையிலிருந்து எவ்வாறு பறந்து சென்றது என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நெடுஞ்சாலையில் சரக்கு வாகனத்திலிருந்து பணம் பறந்து வந்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் செய்துள்ளது.