அட கடவுளே..பக்தர்கள் மீது ஏறிய கார் !

சத்தீஸ்கர் மாநிலம் ஜெய்பூர் நகரில் தசரா கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து காட்சிகள் பதிவாகிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.துர்கா தேவி சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற மக்கள் மீது கார் மோதியது. இந்த சம்பவம் பதல்கானில் உள்ள ராய்காட் சாலையில் நடந்தது.

சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரை அடித்து நொறுக்கினர். வாகனத்தின் டிரைவரை அப்பகுதியினர் தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த காரில் கஞ்சா இருந்ததாகவும், மோதியவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டனரோ எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : மக்கள் கவனத்திற்கு..4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் !