கூகுள் பாஸ்வேர்டு மானேஜர் சேவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

குரோம் செயலியின் வலப்பக்க மேல் மூலையில் மூன்று புள்ளிகள் செங்குத்தாக (vertical) காணப்படும். அவற்றை அழுத்தவும். செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று அதில் பாஸ்வேர்டு (Passwords) என்பதை தெரிவு செய்யவும்.

சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை பார்க்கும்போது, தொடர்புடைய இணையதளத்தையும் பயனர் பெயரையும் பார்க்கலாம். அதில் கண் போன்ற அடையாளம் (icon) காணப்படும்.

கூகுள் பாஸ்வேர்டு மானேஜர் (password manager) சேவை முற்றிலும் இலவசமானது. கூகுள் வெப் பிரௌசருக்குள் கிடைக்கும் இந்த வசதி, நீங்கள் இணையத்தில் பயன்படுத்தும் பயனர் பெயர், கடவுச்சொற்கள் (பாஸ்வேர்டு), பரிவர்த்தனை முறைகள், முகவரிகள் ஆகியவற்றை சேமித்து வைக்கும்.