தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது

cm-mk-stalin-visit-dubai-for-expo-2020
சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டங்கள் முடிந்துள்ள நிலையில 2021-22ம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை 13ம் தேதி தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.