முதல்முறையாக பர்கர் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் வர்த்தகம்

இன்று முதல்முறையாக பர்கர் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் வர்த்தகமாகத் தொடங்கின. ஆரம்பகட்ட வர்த்தகத்தின்போதே 80 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து வர்த்தகமான பர்கர் கிங் பங்குகள், மதியம் ஒரு மணியளவில் 124 விழுக்காடு உயர்ந்து 134.50 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதன்மூலம் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4,500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதன் காரணமாக ஆரம்ப பொது வழங்கலில் பர்கர் கிங் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.