4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஏற்கெனவே, இந்தியாவில் பல பகுதிகளில் 4 ஜி சேவையை தொடங்கி உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு இலவச 4 ஜி சிம் வழங்கி வருகிறது. இதுவே இந்தியாவின் முதல் உள்நாட்டு 4 ஜி நெட்வொர்க் ஆகும்.

அரசு தொலை தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்.என்.எல் 4ஜி சேவையை தொடங்குவதற்கான பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல்லின் 4ஜி சேவை வெற்றிகரமாக தொடங்கியது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவையில் முதல் அழைப்பை மேற்கொண்டதாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்