புதிய அத்தியாத்தை தொடங்க விரும்புகிறோம்- நடிகர் அமீர்கான்

நடிகர் அமீர்கான் – கிரண் ராவ் இருவரும் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வருபவர் நடிகர் அமீர்கான். அமீர் தனது முதல்மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். அமீர்கான் லகான் திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் 2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் – கிரண் ராவ் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது மகன் ஆசாத் இருவருடனும் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது