இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் டிவிட்டர் கணக்கில் இருந்து புளு டிக்கை நீக்கியது டிவிட்டர் நிறுவனம்.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், இவரை அதிக ரசிகர்கள் பின்பற்றுகின்றனர்.இந்நிலையில்,நீண்ட நாட்களாக இந்த டிவிட்டர் பக்கத்தில் ட்விட் செய்யப்படவில்லை.டிக் நீக்கப்பட்ட சில நொடிகளிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதை கவனித்துள்ளனர்.
இதற்கான காரணத்தை ட்விட்டர் நிறுவனம் கூறவில்லை.மேலும் அவரது ரசிகர்கள் ப்ளூ டிக் நீக்கியதன் காரணத்தை ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்கின்றனர்.